×

கொல்லிமலையில் உணவு தேடி கரடி உலா: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான கொல்லிமலை நீண்ட நெடிய வனப்பகுதியாகும். இங்கு குரங்குகள், காட்டுப் பூனை, முயல், காட்டுப்பன்றி, உடும்பு, முள்ளம்பன்றி. கீரிப்பிள்ளை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வளப்பூர் பகுதியில் விவசாய கூலி வேலைக்கு சென்ற ஒருவரை கரடி தாக்கியதில் அவர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் தற்போது கொல்லிமலை சேலூர் நாடு கஸ்பா பகுதியில் உள்ள போலீஸ் வயர்லெஸ் டவர் அருகே கரடி ஒன்று உலா வரும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கொல்லிமலையில் தற்போது நன்கு மழை பெய்து, பலாப்பழங்கள், அன்னாசி பழங்கள் விளைந்து வருவதால் கரடிகள் உணவுக்காக ஆங்காங்கே தென்படுகின்றன. இதனால் பீதி அடைந்துள்ளோம் என்றனர்.

The post கொல்லிமலையில் உணவு தேடி கரடி உலா: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Kolimalaya ,Chendamangalam ,Kollimalai ,Namakkal ,Collimo ,Dinakaran ,
× RELATED கொல்லிமலை முதல் காந்திபேட்டை வரை புறவழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்