×

அரிக்கொம்பன் யானை நடலமுடன் உள்ளது: வனத்துறை தகவல்

நாகர்கோவில்: கேரள மாநிலம் இடுக்கி வனப்பகுதியில் அரிக்கொம்பன் யானை ஊருக்குள் புகுந்து தாக்கியதில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். பின்னர் தமிழக வனப்பகுதியான தேனி, கம்பத்தில் விடப்பட்டது. அங்கும் ஊர் பொதுமக்களை தாக்கியது. கம்பம் பகுதியில் வெளியே சுற்றிக்கொண்டிருந்த யானையை மயக்கமருந்து செலுத்தி மீட்டு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்ப பகுதியில் கோதையாறு அணைப்பகுதியில் குட்டியாறு என்ற இடத்தில் விடப்பட்டது. பின்னர் யானையின் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு அதன் வாயிலாக கண்காணிக்கப்பட்டது. சிறப்பு குழுவினர் யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த யானை குமரி மாவட்ட வனப்பகுதியையொட்டிய இடங்களில் நடமாடுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இருப்பினும் அது குமரி மாவட்ட வனப்பகுதிக்குள் நுழையவில்லை. குமரி மாவட்ட வனத்துறையினரும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் அரிக்கொம்பன் யானை களக்காடு முண்டந்துறை பகுதியில் உள்ள தனது புதிய வீட்டில் நலமுடன் உள்ளது. நன்றாக உணவு உண்ணுதல், தண்ணீர் குடித்தல் மேற்கொள்கிறது. ஊழியர்கள் ரேடியோ காலர் மற்றும் கேமரா வாயிலாக கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகுவும் இது தொடர்பான படங்கள், வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.

The post அரிக்கொம்பன் யானை நடலமுடன் உள்ளது: வனத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Arikomban ,Forest Department ,Nagercoil ,Arikkomban ,Idukki forest ,Kerala ,Nadalam ,department ,Dinakaran ,
× RELATED கோவை அருகே வனப்பகுதியில் ஓடையில்...