×

டாடா நெக்சான் எலக்ட்ரிக் கார்

டாடா நிறுவனம், புதிதாக மேம்படுத்தப்பட்ட நெக்சான் மேக்ஸ் எக்ஸ்இசட் பிளஸ் என்ற எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.18.97 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் காரில் 40.5 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 453 கி.மீ தூரம் வரை செல்லலாம் என அராய் சான்று வழங்கியுள்ளது. 3.3 கிலோவாட் மற்றும் 7.2 கிலோவாட் என இரண்டு சார்ஜர்கள் உள்ளன.

3.3 கிலோவாட் சார்ஜரில் 15 மணி நேரத்திலும், 7.2 கிலோவாட் சார்ஜரில் 6.5 மணி நேரத்திலும் முழுமையாக சார்ஜ் செய்யலாம். இதில் உள்ள மோட்டார் அதிகபட்சமாக 143 எச்பி பவரையும் 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 1.25 அங்குல இன்டோடெயின்மென்ட் சிஸ்டம்,ஆட்டோ கார் பிளே உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

The post டாடா நெக்சான் எலக்ட்ரிக் கார் appeared first on Dinakaran.

Tags : Tata Nexon Electric Car ,Tata ,Nexon ,
× RELATED பங்குச்சந்தையில் இன்று...