×

சென்னையில் நாளை முதல் 5 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை: சங்கர் ஜிவால் உத்தரவு

சென்னை: சென்னையில் நாளை முதல் 5 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மகாபலிபுரத்தில் ஜி 20 மாநாடு நடைபெற உள்ளதையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் நாளை முதல் 5 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; சென்னை மகாபலிபுரத்தில் ஜூன் 19, 20, 21 ஆகிய 3 நாட்கள் ஜி 20 மாநாடு நடைபெற உள்ளது.

இந்த ஜி 20மாநாட்டில் வெளிநாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இவர்கள் அனைவரும் மகாபலிபுரத்தில் நடைபெற உள்ள கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர். எனவே நாளை முதல் வரும் 22ம் தேதி வரை சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட மேற்கத்திகள் வருகை/ தங்கும் இடங்கள் மற்றும் மேற்படி பிரமுகர்கள் பயணம் செய்யும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு அந்த பகுதிகள் மற்றும் வழித்தடங்களில் நாளை முதல் 5 நாட்களுக்கு டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் நாளை முதல் 5 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை: சங்கர் ஜிவால் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sankar Jiwal ,G20 Conference ,Mahapalipuram, Chennai ,Shankar Jiwal ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...