×

பிபர்ஜாய் புயலின் பாதிப்புகள் தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு..!

சூரத்: பிபர்ஜாய் புயலின் பாதிப்புகள் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு செய்தார். தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு குஜராத்தின் ஜகாவ் துறைமுகம் அருகே கரையை கடந்தது. இந்த புயல் மாலை 6.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கி அதிகாலை 2.30 மணி வரை நீடித்தது. இதில் 140 கிமீ வேகத்தில் வீசிய சூறாவளி காற்று மற்றும் மழையால், கட்ச் உள்ளிட்ட மாவட்டங்களில் பல மரங்கள், மின்கம்பங்கள் சரிந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

புயல் கரையை கடந்ததை தொடர்ந்து தேசிய மீட்பு படை மற்றும் போலீசார் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இரவோடு இரவாக, புயலில் விழுந்த மரங்கள் சாலைகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டன. 4,600 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், 3,580 கிராமங்களில் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 1,000 கிராமங்கள் இருளில் மூழ்கி இருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் கூறி உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை விரைந்து வழங்க மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பிபர்ஜாய் புயலின் பாதிப்புகள் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு மேற்கொண்டார்.

குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஹெலிகாப்டர் மூலம் குஜராத் முதலமைச்சருடன் இணைந்து அமித்ஷா ஆய்வு மேற்கொண்டார். கட்ச் மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரை அமித்ஷா சந்தித்து பேசினார். முன்னதாக மாணட்வியில் உள்ள கத்தா கிராம மக்களையும் அமித்ஷா சந்தித்து பேசினார். மேலும் அமித்ஷா, மாண்ட்வி சிவில் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்ட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

The post பிபர்ஜாய் புயலின் பாதிப்புகள் தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு..! appeared first on Dinakaran.

Tags : Union Home Minister Amitsha ,Bibarzai ,southeastern Arabic Sea ,Union Home Minister ,Amitsha ,Bibarzai cyclone ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல் 2024: ஏப்ரல் 12ம் தேதி...