×

ஆதி புருஷ் படத்தை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்துசேனா வழக்கு.. ராமாயணத்தை இழிவுபடுத்தும் காட்சிகளை நீக்க கோரிக்கை!!

டெல்லி ஆதிபுருஷ் திரைப்படத்திற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்து சேனா வழக்கு தொடுத்துள்ளது. ராமாயணத்தை இழிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. ராமாயணத்தை மையமாக வைத்து இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த திரைப்படம் ஆதிபுருஷ். இதில் ராமனாக பிரபாஸ், ராவணனாக ஸையிப் அலிகான். சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 500 கோடி ரூபாய் செலவில் 3டி தொழிலுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவான ஆதிபுருஷ் படம் தமிழ், தெலுங்கு, இந்தி கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது.

இதனிடையே வட இந்தியாவில் ஆதி புருஷ் வெளியான திரையரங்கு ஒன்றில் அனுமாருக்கு தனிச் சீட்டு ஒதுக்கப்பட்டது. காவி நிறமான அந்த சீட்டில் பெண் ஒருவர் அனுமன் சிலை வைத்து வழிபட்டார். திருச்சியில் ஆதி புருஷ் திரைப்படம் பார்த்த ரசிகர்கள் கிராபிக்ஸ் காட்சிகள் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருப்பதாக கருத்து தெரிவித்தனர். இதனால் ஆதி புருஷ் திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெறவில்லை. இதனிடையே ஆதி புருஷ் திரைப்படத்தை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்து சேனா வழக்கு தொடுத்துள்ளது.

ராமாயணம் மற்றும் ராமரை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக மனுவில் இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா புகார் தெரிவித்துள்ளார். இந்துக்களின் மனதை புண்படுத்தக் கூடிய காட்சிகளை ஆதி புருஷ் திரைப்படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ராமர் , சீதை, அனுமன், ராவணன் ஆகியோர் இடம்பெறும் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post ஆதி புருஷ் படத்தை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்துசேனா வழக்கு.. ராமாயணத்தை இழிவுபடுத்தும் காட்சிகளை நீக்க கோரிக்கை!! appeared first on Dinakaran.

Tags : Hindusena ,Delhi High Court ,Aadi Bhush ,Hindu Sena ,Ramayana ,Adi Bhush ,
× RELATED 70,772 கிலோ ஹெராயின் மாயம்; ஒன்றிய உள்துறை...