மன்னார்குடி, ஜூன். 17: மன்னார்குடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நட ந்த பருத்தி ஏலத்தில் ஒரு குவிண் டால் பருத்தி அதிகபட்சமாக ரூ.6,239க்கு விற்பனையானது. இதில் 66 விவசாயிகள் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கோட்டூர், கூத்தாநல்லூர், திருத்துறைப் பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 7500 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி நடைபெற்று தற்போது பஞ்சுகள் அறுவடைசெய்யும் பணிகள் மும் முரமாக நடந்து வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்த பருத்தி பஞ்சுகளை நியாயமான விலைக்கு விற்பனை செய்ய ஒழுங்கு முறை விற்பனை கூடங்களுக்கு கொண்டு வந்து மறைமுக ஏலம் விடப்படுவது வழக்கம். அதன்படி, திருவாரூர், குடவாசல், வலங்கைமான் ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பருத்தி ஏலம் வாரந் தோறும் நடைபெறுகிறது.
இந்நிலையில் மன்னார்குடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திருவா ரூர் விற்பனைக்குழு செயலாளர் ரமேஷ் தலைமையில், கண்காணிப்பாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் பருத்தி ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் 66 விவசாயிகள் கலந்து கொண்டு, 132 மூட்டைகளில் பருத்தி பஞ்சு களை ஏலத்துக்கு கொண்டு வந்தனர். கும்பகோணம், செம்பனார்கோவில், விருத்தாசலம், பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வியாபாரி கள் கலந்து கொண்டு பருத்தியை ஏலத்தில் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.6,239 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.5,789 க்கும் விற் பனையானது. ஒவ் வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று மதியம் 4 மணி அளவில் மன் னார்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெறுவதால் விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
The post திருவாரூர் மன்னார்குடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் குவிண்டால் பருத்தி ரூ.6,239 க்கு விற்பனை appeared first on Dinakaran.
