×

நாகப்பட்டினம் அருகே வடவூர் பகுதியில் வாய்க்கால்களில் மண்டி கிடந்த ஆகாயத்தாமரை அகற்றம்

நாகப்பட்டினம்,ஜூன்17: காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த 12ம் தேதி தமிழ்நாடு முதல்வர் தண்ணீர் திறந்துவிட்டார். இதையடுத்து இன்று (16ம்தேதி) கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது. கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டவுடன் சில நாட்களில் காவிரியின் கடைமடை பகுதியான நாகப்பட்டினத்திற்கு பாசன நீர் வந்து சேரும் என்று ஆர்வமுடன் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் சிறு வாய்க்கால்களை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை உள்ளிட்டவற்றை அகற்றி தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடவூர், குறிச்சி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை பணியாளர்களை கொண்டு தூர் வாரும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகளை உதவி திட்ட அலுவலர் இந்திராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தண்ணீர் வருவதற்குள் பணிகளை முறையாகவும், சுத்தமாகவும் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர். ஊராட்சி மன்ற தலைவர்கள் மனோகரன்(வடவூர்), ஜான்சிராணி(குறிச்சி), திமுக ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய பொறியாளர் ராஜாராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post நாகப்பட்டினம் அருகே வடவூர் பகுதியில் வாய்க்கால்களில் மண்டி கிடந்த ஆகாயத்தாமரை அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Agayathamar ,Vadavoor ,Nagapattinam ,Chief Minister ,Tamil ,Nadu ,Mettur dam ,Cauvery delta district ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி...