×

தேனியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: போக்குவரத்து போலீசார் பிரசாரம்

 

தேனி, ஜூன் 17: தேனியில் போக்குவரத்து போலீசார் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பிரசுரங்களை வாகன ஓட்டுனர்களிடம் விநியோகித்து பிரசாரம் செய்தனர்.தேனி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி தலைமையிலான போலீசார் தேனி நகர் நேரு சிலை அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசுரங்களை இச்சாலையில் பயணித்த டூவீலர் மற்றும் கார், ஆட்டோ டிரைவர் உள்ளிட்ட வாகன ஓட்டிகளுக்கு விநியோகித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். அப்போது, அதிக வேகம் கூடாது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, செல்போன்களை பேசிக்கொண்டே வாகனம் ஓட்டக்கூடாது, ஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது போன்ற அறிவுரைகளை கூறினர்.

மேலும், தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1 ஆயிரம், குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம், செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால் ரூ.1 ஆயிரம், அதிக வேகமாக வாகனம் ஓட்டினால் ரூ.2 ஆயிரம், சிக்னலை மதிக்காமல் வாகனம் ஓட்டினால் ரூ.500, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரம், இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரம், இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணித்தால் ரூ.1 ஆயிரம் , தேவையின்றி அதிக ஒலிஎழுப்பும் ஹாரன் அடித்தால் ரூ.10 ஆயிரம், பெர்மிட் இன்றி வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் , பதிவு எண் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.2500 அபராதம் விதிக்கப்படும் என அபராதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

The post தேனியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: போக்குவரத்து போலீசார் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Theni ,Honey ,Dinakaran ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்