×

பல்லடம் மகாளியம்மன் கோயில் திருப்பணி ஆலோசனை கூட்டம்

 

பல்லடம், ஜூன் 17:பல்லடம் கடை வீதி மகாளியம்மன் கோயில் திருப்பணி ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அறநிலைய துறை செயல் அலுவலர் ராமசாமி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் அதிமுக நகர செயலாளர் ராமமூர்த்தி, திமுக முன்னாள் நகர செயலாளர் விமல் பழனிசாமி, முன்னாள் நகராட்சி துணைத் தலைவர் தர்மராஜன், பல்லடம் தமிழ்ச்சங்க தலைவர் ராம்.கண்ணையன், பல்லடம் அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் அண்ணாதுரை,

சமூக ஆர்வலர் கூட்டமைப்பு செயலாளர் மணிகாரர் பாலசுப்ரமணியம், கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் துரைக்கண்ணன், பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்கம் நாகராஜ், ஆசிரியர் பாலு, ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் கூட்டமைப்பு தலைவர் வாத்தியர் ரங்கசாமி, லிங்ககுருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கடை வீதி மாகாளியம்மன் கோயில் திருப்பணி செய்திட அனுமதி வழங்கிய இந்து அறநிலைய ஆட்சித்துறைக்கு நன்றி தெரிவித்து கொள்வது என்றும் கோயில் திருப்பணியை விரைவில் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது.

The post பல்லடம் மகாளியம்மன் கோயில் திருப்பணி ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Palladam Mahaliyamman temple repair ,Palladam ,Shop ,Road Mahaliyamman temple repair ,Department of Charities ,Palladam Mahaliyamman Temple Tirupani Meeting ,Dinakaran ,
× RELATED திருநங்கையை தாக்கியவர் கைது