×

திண்டுக்கல்லில் ஜவுளி கடையை உடைத்து கொள்ளை

திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு ரதவீதியில் ஜவுளிக்கடை ஒன்று நான்கு தளங்களை கொண்டு செயல்படுகிறது. இங்கு சுமார் 500 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இக்கடையின் 4வது தளத்தில்தான் அக்கவுண்ட் செக்ஷன் மற்றும் கடை உரிமையாளர்களின் அறை உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்ததும் ஊழியர்கள் கடையை மூடி விட்டு சென்று விட்டனர். இரவில் காவலர்கள் பணியில் இருந்தனர். நேற்று காலை வழக்கம்போல் வந்து கடையை திறந்த போது 4வது தளத்தில் உள்ள கதவுகளின் பூட்டுகள், ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் அக்கவுண்ட் செக்ஷனில் பணம் இருப்பு வைத்த பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. இதையடுத்து அந்நிறுவனத்தினர், உடனே திண்டுக்கல் நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களை வரவழைத்து கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாயையும் வரவழைத்து சோதனை நடத்தப்பட்டது.

தொடர்ந்து போலீசார், கடைக்குள் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் கடைக்குள் நுழையும் மர்மநபர்கள் சிசிடிவி கேமராக்களை துணியால் மூடும் காட்சிகள் பதிவாகியிருந்தது. கொள்ளை போன பணத்தின் மதிப்பு தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இப்பகுதியில் நடந்த ெகாள்ளை சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post திண்டுக்கல்லில் ஜவுளி கடையை உடைத்து கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Dindigul East Rathavedi ,Dindigulli ,Dinakaran ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...