×

அத்திப்பட்டு புதுநகரில் வெள்ள நீர் செல்லாதவாறு ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்படும் தடுப்பு சுவர்: 2 கிலோ மீட்டர் தூரம் அமைக்க கோரிக்கை

பொன்னேரி: அத்திப்பட்டு புதுநகரில், அவசரகதியில் அமைக்கப்பட்டுவரும் தடுப்புச் சுவர் பணிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு தடுத்து நிறுத்தினர்.திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் தாழ்வான பகுதி என்பதால் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து பொது மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் அங்குள்ள தாங்கள் நீர்நிலை இடத்தில் கன மழையால் வெள்ள நீர் ஊருக்குள் புகாமல் இருக்க பொதுமக்களை பாதுகாத்திடும் வகையில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என, அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சி மன்ற சார்பில், தமிழக அரசுக்கும் திருவள்ளூர் கலெக்டருக்கும் நேரடியாக சென்று கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

வல்லூர் தேசிய அனல் மின் நிலைய சமூக மேம்பாட்டு நிதியில் ரூ.50 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் தடுப்பு சுவர் 50 அடி அகலத்திற்கு 400 மீட்டர் தூரம் அமைக்கப்படுகிறது. ஆனால் 100 அடி அகலத்திற்கு 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு முழுவதுமாக தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்றும், நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக அளவீடு செய்து அமைக்க வேண்டும். தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம்டிஜி கதிர்வேல் அத்திப்பட்டு புதுநகர் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கட்டுமான பணி நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்து அங்குவந்த மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ஜி.ரவியிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளாமல் ஒப்பந்ததாரர்கள் நிறுத்தி விட்டுச் சென்றனர். 100 அடி அகலத்திற்கு வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுப்புச் சுவர் உயரமாக அமைக்க வேண்டும் என வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்திருந்த நிலையில் அவசர அவசரமாக ஒப்பந்தக்காரர் பணிகளை ஏன் அரசு அதிகாரிகளுக்கு தெரியாமல் செய்கின்றார் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். மேலும், உரிய நில அளவீடு செய்து பொதுமக்களுக்கு பாதிக்காத அளவிற்கு பணிகள் தொடங்க வேண்டும் என்று நடைபெற்ற பணியை நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post அத்திப்பட்டு புதுநகரில் வெள்ள நீர் செல்லாதவாறு ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்படும் தடுப்பு சுவர்: 2 கிலோ மீட்டர் தூரம் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Adipattu New Nagar ,Ponneri ,Attipattu New Nagar ,Thiruvallur District Meenchur Union ,New Nagar ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்காக பள்ளிகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை அகற்றுவதில் சிரமம்