குடியாத்தம், ஜூன் 17: குடியாத்தத்தில் கிழிந்த ஆடையுடன் புகார் அளிக்க வந்த மூதாட்டிக்கு இன்ஸ்பெக்டர் புதிய ஆடை வாங்கி கொத்தார். ேவலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சீவூர் கிராமத்தை சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி. இவர் டவுன் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளிக்க வந்தார். அப்ேபாது, மூதாட்டி தாகமாய் இருக்கிறது, தண்ணீர் கொடுங்கள் என்று காவல் நிலைய வரவேற்பாளரிடம் கேட்டார். இதையறிந்த இன்ஸ்பெக்டர் லட்சுமி வெளியே வந்து மூதாட்டிக்கு தண்ணீர் கொடுத்தார். அப்போது மூதாட்டியின் ஆடை கிழிந்திருந்ததை பார்த்ததும் உடனே புதிய ஆடை வாங்கி வர காவலர்களை அனுப்பினார்.
அவர்கள் வாங்கி வந்த 3 சேலைகள் மற்றும் ஜாக்கெட்டை மூதாட்டியிடம் கொடுத்தார். மேலும், உணவையும் வாங்கி கொடுத்து புகார் மனுவை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். ஆடையை பெற்ற மூதாட்டி மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த மூதாட்டிக்கு ஆடை வாங்கி கொடுத்த இன்ஸ்பெக்டரின் செயலை காவல் துறையினர் மட்டுமின்றி பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
The post மூதாட்டிக்கு புதிய ஆடை வாங்கி கொடுத்த இன்ஸ்பெக்டர் குடியாத்தத்தில் நெகிழ்ச்சி கிழிந்த ஆடையுடன் புகார் அளிக்க வந்த appeared first on Dinakaran.