×

18 மாவட்டங்களில் சதம் நெல்லையில் 105 டிகிரி வெயில் கொளுத்தியது

நெல்லை, ஜூன் 17: நெல்லையில் நேற்று இயல்பைவிட வெப்பம் அதிகரித்ததை அடுத்து 105 டிகிரி வெயில் கொளுத்தியது. 18 மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி வெயில் நிலவியது. தென் மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியதின் அறிகுறியாக அரபிக் கடலில் அதிதீவிர புயல் உருவானது. அது நேற்று முன்தினம் குஜராத் அருகே கரையைக் கடந்தது. அரபிக் கடலில் புயல் தீவிரம் அடைய தொடங்கியதில் இருந்து கடல் பரப்பில் உள்ள ஈரப்பத காற்றை உறிஞ்சத் தொடங்கியது. அதே நேரத்தில் வங்கக் கடல் பகுதியிலும் ஒரு குறைந்த காற்றழுத்தம் உருவாகி மியான்மர் ேநாக்கி நகர்ந்தது. இந்த இரண்டு நிகழ்வுகளின் காரணமாக ஈரப்பதம் உள்ள காற்று முற்றிலுமாக உறிஞ்சப்பட்டு வறண்ட வானிலை நிலவியது.

அதன் காரணமாக பல இடங்களில் இயல்பைவிட கூடுதலாகவே வெப்பம் தகித்தது. சென்னை, கோவை, கடலூர், தர்மபுரி,நெல்லை, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவள்ளூர், மதுரை மற்றும் வேலூர், சென்னை பகுதிகளில் இயல்பைவிட 4.9 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்தது. அதனால், அங்கு 105 டிகிரி (பாரன்ஹீட்) வெயில் கொளுத்தியது. மேலும், கடலூர், ஈரோடு, தஞ்சாவூர், கரூர் பரமத்தி, பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, நாகப்பட்டினம், திருச்சி பகுதிகளில் 102 டிகிரி முதல் 105 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. நீலகிரி, ஈரோடு, திண்டுக்கல், ராமநாதபுரம், சேலம், கன்னியாகுமரி, அதிராமபட்டினம், கோவை உள்பட 18 மாவட்டங்களில் 100 டிகிரி வெயில் நிலவியது. அடுத்த சில தினங்களுக்கும் 102 டிகிரி முதல் 106 டிகிரி வரை வெயில் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post 18 மாவட்டங்களில் சதம் நெல்லையில் 105 டிகிரி வெயில் கொளுத்தியது appeared first on Dinakaran.

Tags : Satham Nella ,Nellai ,Dinakaran ,
× RELATED நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர்,...