
பெங்களூரு,: பெரு நாட்டில் நடந்த இளம் பெண்களுக்கான சர்வதேச அழகு போட்டியில் பெங்களூருவை சேர்ந்த இளம்பெண் முதலிடம் பிடித்தார். தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் இளம் பெண்களுக்கான அழகு போட்டி நடந்தது. இதில் உலகின் பல நாடுகளில் இருந்தும் 20 வயதுக்கும் குறைவான இளம் பெண்கள் பங்கேற்றனர். பத்து சுற்றுகளாக நடந்த போட்டியில் கர்நாடக மாநிலம், பரகூருவில் பிறந்து பெங்களூருவில் உள்ள கல்லூரியில் படித்து வரும் ஸ்சுவிசல் பெர்டாடோ அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு போட்டியில் வெற்றி பெற்றதற்கான கிரீடம் தலையில் சூட்டப்பட்டது.
டெல்லியில் கடந்தாண்டு நடந்த மிஸ் சூப்பர் மாடல் இந்தியா-2022 போட்டியிலும் அவர் பங்கேற்று வெற்றி பெற்றிருந்தார். உயர்நிலை பள்ளியில் படித்தபோதே, பல்வேறு பேஷன் ஷோக்களில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளார். பெரு நாட்டில் நடந்த போட்டியில் வெற்றி பெற்று நேற்று பெங்களூரு திரும்பிய அவருக்கு சிறப்பாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
The post பெரு நாட்டில் நடந்த போட்டியில் பெங்களூரு இளம்பெண் அழகியாக தேர்வு appeared first on Dinakaran.