×

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் அருகே பயங்கர தீ விபத்து

திருப்பதி: திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் அருகே சுவாமி படங்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இங்கு 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் கடையிலிருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டு புகை வந்ததால் கடையில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என அனைவரும் அலறி அடித்து வெளியே வந்தனர். மேலும் காற்று பலமாக வீசியதால் 3 அடுக்கு மாடிகளிலும் தீ வேகமாக பரவி கொளுந்துவிட்டு எரிய ஆரம்பித்துவிட்டது.

தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்தனர். விபத்திற்கு காரணம் மின்சார கசிவு என்பது தெரியவந்துள்ளது. கடையில் தீ பிடிக்க ஆரம்பிக்கும்போதே ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வெளியே வந்ததால் உயிர்சேதம் ஏதும் இல்லை என தெரிகிறது.

The post திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் அருகே பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Tirupati Govindaraja Swamy Temple ,Tirupati ,Swami ,Dinakaran ,
× RELATED பாஜ அழைத்தால் பிரசாரம் செய்வேன்: நடிகை ஜெயப்பிரதா பேட்டி