×

கோத்ரா கலவர வழக்கில் 35 பேர் விடுதலை

ஹலோல்: கடந்த 2002ல் குஜராத் ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்தது. பஞ்சமஹால் மாவட்டம் கலோல்,டெலோல் மற்றும் டெரோல் ஸ்டேசன் ஆகிய இடங்களில் கலவரம் ஏற்பட்டு 3 பேர் பலியாயினர். இந்த வழக்கில் 52 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பஞ்சமஹால் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின் போதே 17 பேர் இறந்தனர். மீதி உள்ள 35 பேர் மீது தொடர்ந்து வழக்கு நடந்து வந்தது. இதில்,130 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 20 ஆண்டுக்கும் மேலாக நடந்து வந்த வழக்கில் கடந்த 12ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.

தீர்ப்பின் விவரங்கள் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டன. கூடுதல் செசன்ஸ் நீதிபதி ஹர்ஷ் திரிவேதி அளித்த தீர்ப்பில்,‘‘ குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. கலவரத்தில் ஈடுபட்டதற்கான சாட்சியாக அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பவில்லை. எனவே, அனைவரும் விடுதலை செய்யப்படுகின்றனர்’’ என்றார். தீர்ப்பை அளித்த நீதிபதி மேலும் கூறுகையில்,‘‘கலரவத்தால் அமைதியை விரும்பும் குஜராத்தி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுவது போல், இது திட்டமிட்ட கலவரம் என்று மதசார்பற்ற மீடியாக்கள், அரசியல்வாதிகள் பொய் பிரசாரம் செய்தது கண்டிக்கத்தக்கது’’ என்றார்.

The post கோத்ரா கலவர வழக்கில் 35 பேர் விடுதலை appeared first on Dinakaran.

Tags : Gothra riot ,Halol ,Gujarat train ,Punjamahal District Kalol ,Delol ,Dinakaran ,
× RELATED வருமான வரி ரெய்டில் சிக்கிய ரூ.1000 கோடி