×

மதுராந்தகம் ஜமாபந்தி நிறைவுநாளில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

மதுராந்தகம்: மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிறைவு நாளில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகா அலுவலகத்தில், கடந்த மாதம் 30ம் தேதி ஜமாபந்தி முகாம் தொடங்கி நேற்று முன்தினம் வரை நடந்தது. இதில், 17 நாட்கள் நடந்த, இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 1366 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 164 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன. இந்நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட 116 பயனாளிகளுக்கு ரூ.80 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முதன்தினம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சாராட்சியர் லட்சுமிபதி தலைமை தாங்கினார். தாசில்தார் ராஜேஷ் முன்னிலை வகித்தார். முன்னதாக துணை வட்டாட்சியர் வெங்கடேசன் வரவேற்றனர்.

இதில், மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், மதுராந்தகம் நகர மன்ற தலைவர் மலர்விழிகுமார், மதுராந்தகம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் கீதா கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு முதலமைச்சர் பொது நிவாரணநிதியில் இருந்து 2 பேருக்கு தலா ரூ.2 லட்சம், முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரணமத்தோருக்கு ஈமச்சடங்கு உதவித்தொகையாக 28 பேருக்கு ரூ.5 லட்சத்து 62 ஆயிரம், பட்டா மாற்றம், கிராம நத்தம் பட்டா, 78 பேருக்கு ரூ.66 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் 78 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா ஆகியவற்றை வழங்கினர். இதில், திமுக நகர செயலாளர் குமார், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் கார்த்திகேயன், விவேகானந்தன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுரேஷ், தமிழரசன் உள்ளிட்ட வருவாய் துறையினர் மற்றும் கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மதுராந்தகம் ஜமாபந்தி நிறைவுநாளில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Tags : Madhurandakam Jamabandhi ,Jamabandhi ,Collector ,Maduraandakam ,Chengalpattu district ,Madurandakam Jamabandhi ,Dinakaran ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...