×

கம்பெனி ஊழியரை மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

பெரம்பூர்: வியாசர்பாடி புதுநகரை சேர்ந்தவர் லெனின் (44). தனியார் கம்பெனி ஊழியரான இவர், நேற்று முன்தினம் மாலை எம்கேபி நகர் சென்ட்ரல் அவென்யூ சாலை வழியாக சென்றபோது, ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி, லெனின் இடமிருந்து 500 ரூபாயை பறித்து சென்றார்.

இதுகுறித்த புகாரின் பேரில், எம்கேபி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரித்தனர். அதில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வியாசர்பாடி பி.வி காலனியை சேர்ந்த ரவுடி ஆசைத்தம்பி (25) என்பவர் பணம் பறித்தது தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.

The post கம்பெனி ஊழியரை மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது appeared first on Dinakaran.

Tags : Perambur ,Lenin ,Vyasarpadi Pudunagar ,MKP Nagar ,
× RELATED வெடித்து சிதறிய மின்பெட்டி