×

ஆர்எம்டி பொறியியல் கல்லூரியில் 22வது கல்லூரி தினம் விளையாட்டு விழா

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.டி பொறியியல் கல்லூரியின் 22வது கல்லூரி தின விழா மற்றும் விளையாட்டு தின விழா நடைபெற்றது. விழாவிற்கு ஆர்.எம்.கே. கல்வி குழும தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஆர்.எம் கிஷோர் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் என்.அன்புச்செழியன் ஆண்டறிக்கையை வாசித்தார். கல்வி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை டி.ருக்மணி தேவி ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.

விழாவில் கல்வி குழும தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் பேசும் போது, கலை மற்றும் பாடநெறிக்கு அப்பாற்பட்ட ஏனைய நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்கச் செய்வதில் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஒவ்வொருவரின் முயற்சியையும் பாராட்டுக்குறியது, என்றார். இந்த விழாவில் பட்டிமன்ற பேச்சாளரும், எழுத்தாளருமான பாரதி பாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது: மாணவர்கள் சிறந்த கல்வியை கற்று அதன்மூலம் பெற்றோர்களுக்கு தார்மீக பொறுப்புகளுடன், வாழ்க்கையை நடத்தவேண்டும். ஆசிரியர்களால் புகுத்தப்பட்ட நெறிமுறைகளை பின்பற்றி, இலக்குகளை அடைய வேண்டும். அதிக நம்பிக்கையுடன் வாழ்க்கையை நடத்த வேண்டும். மேலும் சிறந்த கற்பித்தல், கற்றல் சூழலுக்காக அதிநவீன உள்கட்டமைப்பை வழங்குவதன் மூலம் கல்லூரியின் மேம்பாட்டிற்கான அர்ப்பணிப்பிற்காக கல்லூரி நிர்வாகத்தை பாராட்டுகிறேன் என்றார்.

மேலும் கல்வியில் முதலிடம் பெற்றவர்களுக்கும், விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், தங்கப் பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் விருதுகள் என மொத்தம் 2,062 மாணவர்களுக்கு கல்வி விருதுகளையும், 106 மாணவர்களுக்கு விளையாட்டு விருதுகள் என மொத்தம் ரூ.30 லட்சம் பரிசுத்தொகையை வழங்கினார். இதில் கல்லூரி இயக்குனர் ஆர்.ஜோதி நாயுடு, செயலாளர் யளமஞ்சி பிரதீப், துணைத்தலைவர் துர்காதேவி பிரதீப், நிர்வாக அறங்காவலர் சௌமியா கிஷோர், கல்லூரி ஆலோசகர்கள் எம்.எஸ்.பழனிச்சாமி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.பிச்சாண்டி, வி.மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் கல்லூரி டீன் கே.கே.தியாகராஜன் நன்றி தெரிவித்தார்.

The post ஆர்எம்டி பொறியியல் கல்லூரியில் 22வது கல்லூரி தினம் விளையாட்டு விழா appeared first on Dinakaran.

Tags : 22nd College Day Sports Festival ,RMT College of Engineering ,Chennai ,22nd College Day ,RMD Engineering College ,Kavarippet ,Kummidipoondi, Thiruvallur district ,Dinakaran ,
× RELATED சென்னை துறைமுகத்தில் பாரம் தூக்க முடியாமல் கிரேன் கவிழ்ந்து விபத்து..!!