×

இந்தோனேசியா ஓபன்: அரையிறுதியில் சாத்விக் – சிராக்

ஜகார்தா: இந்தோனேசியா ஓபன் சூப்பர் 1000 பேட்மின்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி – சிராக் ஷெட்டி இணை தகுதி பெற்றது.காலிறுதியில் முதல் நிலை ஜோடியான இந்தோனேசியாவின் பாஜர் அல்பியான் – முகமது ரியான் அர்டியன்டோ உடன் மோதிய இந்திய இணை 21-13, 21-13 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றியை வசப்படுத்தியது.

இப்போட்டி 41 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. எச்.எஸ்.பிரணாய் முன்னேற்றம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் களமிறங்கிய இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய் 21-18, 21-6 என்ற நேர் செட்களில் ஜப்பானின் கொடாய் நரோகாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் சீனாவின் லி ஷி பெங்கிடம் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

The post இந்தோனேசியா ஓபன்: அரையிறுதியில் சாத்விக் – சிராக் appeared first on Dinakaran.

Tags : Indonesia Open ,Sadwik ,Chirac ,Jakarta ,India ,Satwicksairaj Rangretti ,Indonesia Open Super 1000 badminton ,Dinakaran ,
× RELATED இந்திய மாணவர் சுட்டு கொலை: கனடாவில் பயங்கரம்