×

தூத்துக்குடியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் மீது தாக்குதல்: பணம் செலுத்திய பிறகும் அடமான நகையை தராததால் ஆத்திரம்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கல்வி கடன் பாக்கி இருப்பதால் அடமானம் வைத்த நகையை திரும்ப தர மறுத்த வங்கி மேலாளர் மற்றும் ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாப்பிளை யூரணி கிராமத்திலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் புதிய முனியசாமி புரத்தை சேர்ந்த பொன்ராஜ் என்பவர் தனது மகனின் கல்விக்காக கடந்த 2016ம் ஆண்டு கடன் பெற்றார்.

அதே போல் தனது நகையை அடகு வைத்தும் கடன் பெற்றிருந்தார். இந்நிலையில் பொன்ராஜ் வங்கியில் அடகு வைத்திருந்த நகைக்கு பணம் முழுவதையும் செலுத்தியுள்ளார். ஆனால் கல்வி கடன் பாக்கி இருப்பதால் நகையை திருப்பிதர வங்கி மேலாளர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொன்ராஜ் மற்றும் அவரது மகன் இசக்கிச்செல்வம் ஆகியோர் வங்கி மேலாளர் மற்றும் ஊழியரை தாக்கினர். காயமடைந்த வங்கி மேலாளர் திவாகர் வங்கி ஊழியர் ஈஸ்வரன் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே தாக்குதல் நடத்திய தந்தை, மகனிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தூத்துக்குடியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் மீது தாக்குதல்: பணம் செலுத்திய பிறகும் அடமான நகையை தராததால் ஆத்திரம் appeared first on Dinakaran.

Tags : Thutukudi ,Thoothukudi ,Indian Oversee ,Dinakaran ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...