×

டிஎன்பிஎல் டி.20 லீக்: கோவை-நெல்லை இன்று மோதல்

கோவை: 8 அணிகள் பங்கேற்றுள்ள 7வது டிஎன்பிஎல் டி.20 லீக் தொடர் போட்டிகள் கோவையில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 5வது லீக் போட்டியில். சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருப்பூர் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்களே எடுத்தது.

பின்னர் களம் இறங்கிய சேப்பாக்கம் 15.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 121 ரன் எடுத்தது 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது 2வதுவெற்றியாகும். திருப்பூர் 2வது தோல்வியை சந்தித்தது. இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் போட்டியில் கோவை-நெல்லை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

The post டிஎன்பிஎல் டி.20 லீக்: கோவை-நெல்லை இன்று மோதல் appeared first on Dinakaran.

Tags : TNPL T20 League ,Coimbatore ,Nella ,7th TNPL T20 league ,Nellie ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்