×

2019ல் உலக கோப்பையில் நீக்கம் ஏன்?: அம்பதிராயுடு குற்றச்சாட்டுக்கு எம்எஸ்கே பிரசாத் பதில்

ஐதராபாத்: அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே கோப்பை வென்ற நிலையில் அந்த அணியி்ன மிடில் ஆர்டர் பேட்டர் அம்பதி ராயுடு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், 2019 ஆம் ஆண்டு உலககோப்பை தொடரில் எடுக்கப்படாதது குறித்து பேசினார். நான் ஐதராபாத் அணிக்காக விளையாடியபோது அப்போது எம்.எஸ்.கே பிரசாத் கேப்டனாக இருந்தார். அவரது அணுகுமுறை எனக்கு பிடிக்கவில்லை. ஆகையால் வேறொரு அணிக்கு சென்று விட்டேன். ஐதராபாத் அணியின் பெரிய பொறுப்பிலும் இவரது உறவினர்கள் இருந்தனர். அப்போது நடந்த சில விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு என்னை உலககோப்பையில் எடுக்காமல் விட்டுவிட்டார்கள், என்றார்.

இதற்கு அப்போது தேர்வுக்குழு தலைவராக இருந்த எம்எஸ்கே பிரசாத் அளித்துள்ள பதில், “பொதுவாக தேர்வுகுழு அணியின் தலைவராக இருக்கும் நான் மட்டும் தேர்வுகுழுவில் இல்லை. மொத்தம் ஐந்து பேர் இருப்பர். அத்துடன் கேப்டனுடன் ஆலோசித்த பிறகு வீரர்களை முடிவு செய்வோம். இப்படி இருக்க ராயுடுவிற்கு இது ஏன் புரியவில்லை? நான் மட்டும் எடுக்கப்படும் முடிவுகள் இல்லை என்பதை அவரும் உணர்ந்திருப்பார். ஆனால் பழசை மனதில் வைத்துக்கொண்டு பேசுகிறேன் என்று நினைக்கிறார். இந்த குற்றச்சாட்டு முறையானது அல்ல.” என்றார்.

The post 2019ல் உலக கோப்பையில் நீக்கம் ஏன்?: அம்பதிராயுடு குற்றச்சாட்டுக்கு எம்எஸ்கே பிரசாத் பதில் appeared first on Dinakaran.

Tags : 2019 World Cup ,MSK Prasad ,Ambatrayudu ,Hyderabad ,CSK Cup ,IPL ,World Cup ,Dinakaran ,
× RELATED 2019 உலகக்கோப்பையுடன் தேனி ஒய்வு...