×

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வளசரவாக்கம் பகுதியில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை: சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வளசரவாக்கம் பகுதியில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 11.08.2022 அன்று “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற திட்டத்தை துவக்கி வைத்து, தமிழகத்தில் போதை பொருட்களை ஒழிக்க உத்தரவிட்டதன் பேரில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின் பேரில் போதை ஒழிப்பு குறித்து, காவல் துறை சார்பில் பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களுக்கு நேரில் சென்று போதை எதிர்ப்பு குறித்து எடுத்துரைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, வருகிற ஜுன் 26ம் நாள் “சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை” முன்னிட்டு, காவல் ஆணையாளரின் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், இணை ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில் துணை ஆணையாளர்கள் நேரடி கண்காணிப்பில் உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினரால் போதை பொருள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்று (15.06.2023) மாலை கோயம்பேடு காவல் மாவட்டம், வளசரவாக்கம் பகுதியில் உள்ள SRM Dental College-ல் நடந்த நிகழ்ச்சியில் மேற்கு மண்டல காவல் இணை ஆணையாளர் M.மனோகர், கலந்து கொண்டு போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் விழிப்புணர்வு குறித்து கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.

மேலும் போதை பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக வளசரவாக்கம் சுற்றுப்புற பகுதிகளில் Say No To Drugs என்ற விழிப்புணர்வு பதாகைகள் (Banners) ஏந்தியபடியும் சுவரொட்டிகள் (Posters) மற்றும் துண்டு பிரசுரங்களை (Awareness Pamphlets) வெளியிட்டு பொதுமக்களுக்கு போதைப்பொருட்களுக்கு எதிரான வாசகங்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கி, சென்னை பெருநகர காவல் துறையின் பேன்டு வாத்திய இசைகுழுவின் இசை நிகழ்ச்சிகள் மூலம் போதைபொருட்களுக்கெதிரான விழிப்பணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோயம்பேடு காவல் மாவட்ட துணை ஆணையாளர் P.குமார், வளசரவாக்கம் உதவி ஆணையாளர் கௌதமன், காவல் அதிகாரிகள், திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர்கள் ரோபோசங்கர், வினோத், ஜெயசந்திரன் மற்றும் பொதுமக்கள் உட்பட சுமார் 300 மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.

The post சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வளசரவாக்கம் பகுதியில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Walasaravakkam ,International Day against Drug Abolition ,Chennai ,Valasaravakkam ,International Day against Drug Abuse ,Chief Minister ,International Drug Abolition Day ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு