×

ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றுத்தான் இலாகாவை மாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை: கே.பாலகிருஷ்ணன், கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: செந்தில் பாலாஜி வகித்த துறைகளை பிற அமைச்சர்களுக்கு மாற்ற ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்தார். முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்காமல் திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்;

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

சட்டவிதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்று ஆளுநருக்கு அறிவுரை வழங்க ஒன்றிய அரசு தயாராக இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றுத்தான் இலாகாவை மாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. இலாகாவை மாற்ற ஆளுநரிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்று சட்டத்தில் எதுவும் இல்லை. ஆளுநர் நிராகரித்ததுனாலேயே இலாகா மாற்றம் நடக்காமல் இருக்குமா? என்று அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர் ஆளுநர் என்று மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநரின் ஒப்புதலின்றி இலாகாவை மாற்றவோ, அமைச்சர்களை மாற்றவோ முதல்வரால் முடியும் என்று அவர் தெரிவித்தார்.

The post ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றுத்தான் இலாகாவை மாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை: கே.பாலகிருஷ்ணன், கே.எஸ்.அழகிரி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : K. Balakrishnan ,K. S. Alakiri ,Chennai ,Chief Minister ,B.C. G.K. Stalin ,CM ,Loga ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல்...