×

கரையை கடந்தது பிபர்ஜாய் புயல்..944 கிராமங்கள் இருளில் மூழ்கின.. 524 மரங்கள் முறிந்தன.. 22 கால்நடைகள் பலி!!

கட்ச்: பிபர்ஜாய் புயல் வலுவிழந்தாலும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் 10 நாட்களுக்கும் மேலாக நிலை கொண்டிருந்த பிபர்ஜாய் புயல் குஜராத்தின் சவுராஷ்ட்ரா, குச் மாவட்டங்களுக்கு இடையே நேற்று நள்ளிரவில் கரையை கடந்தது. புயலின் கண் சுமார் 50 கிமீ விட்டம் கொண்டதாக இருந்தது. அப்போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் காற்று வீசியது.புயல் காரணமாக இரவு முழுவதும் கடும் சூறாவளியுடன் பெய்த கனமழையால் 524 மரங்கள் வேரோடு முறிந்தன. 300 மின் கம்பங்கள் உடைந்தன. 944 கிராமங்கள் இரவில் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கின.

பிபர்ஜாய் புயல் காரணமாக 2 பேர் உயிரிழந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக மனித இறப்புகள் பெரிய அளவில் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் பல்லாயிரக்கணக்காண வீடுகள் புயல் காற்றால் உருகுலைந்துள்ளன. 22 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் 23 கால்நடைகள் மரணம் அடைந்துவிட்டன. சில இடங்களில் செல்போன் கோபுரங்களும் உடைந்து விழுந்தன. மிகவும் தீவிரமான சூறாவளி புயலாக வகைப்படுத்தப்பட்டுள்ள பிபர்ஜாய் புயல் காரணமாக கடலோர கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

புயல் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக 15 என்டிஆர்எப் குழுக்கள், மாநில பேரிடர் மீட்புப் படையின் 12 குழுக்கள் மற்றும் இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை, இந்திய கடலோர காவல்படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை ஆகியவற்றின் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் கட்ச், தேவபூமி துவாரகா, ஜாம்நகர், போர்பந்தர், ராஜ்கோட், மோர்பி, ஜுனகர் மாவட்டங்களில் மிக கனமான மழை கொட்டியது.அரபிக்கடலில் கடல் அலைகளும் சீற்றமாக இருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை. இதனிடையே இன்று காலை புயல் வலுவிழக்கும் என்றும் தெற்கு ராஜஸ்தானிலும் கனமழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

The post கரையை கடந்தது பிபர்ஜாய் புயல்..944 கிராமங்கள் இருளில் மூழ்கின.. 524 மரங்கள் முறிந்தன.. 22 கால்நடைகள் பலி!! appeared first on Dinakaran.

Tags : Storm Bibarzai ,KATCH ,Meteorological Centre ,Bibarzai ,Arabic Sea ,Bibarjai Storm ,
× RELATED தமிழ்நாட்டில் 3 நாட்கள் கனமழைக்கு...