×

மருத்துவ குழு சாதனை திருச்சியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு

திருச்சி, ஜூன் 16: திருச்சி அரியமங்கலம் அம்மாக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தவ்பீக் (24). இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அம்மாகுளம் கிளை செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் நேற்றிரவு அப்பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது, சுமார் 10 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளுடன் தவ்பீக்கை சுற்றி வளைத்து தலை மற்றும் உடலில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டினர். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தவ்பீக்கை வெட்டிய மர்மநபர்களை விரைந்து கைது செய்யக்கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அரசு ஆஸ்பத்திரி முன்பு நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல்அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம், பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. திருச்சி அரசு மருத்துவமனை முன் நள்ளிரவு நடந்த சாலை மறியல் சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post மருத்துவ குழு சாதனை திருச்சியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Tags : Trichy ,Thawbeek ,Ammakkulam ,Ariyamangalam, Trichy ,Indian Democratic Youth Association ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி...