×

மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் திட்டத்தில் பெண்கள் சேரலாம்

தஞ்சாவூர் ஜூன் 16: பட்டுக்கோட்டை அஞ்சல் கண்காணிப்பாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய அரசாங்கத்தால் பெண்களுக்கான புதிய சேமிப்பு திட்டமான மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் என்ற திட்டம் இந்த நிதியாண்டு முதல் தபால் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் அனைத்து பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் எவ்வித வயது வரம்பின்றி சேரலாம். இந்த திட்டத்திற்கு குறைந்தபட்ச முதலீடு ரூ.1000 மற்றும் அதிகபட்ச முதலீடு ரூ.2 லட்சம் ஆகும். இதற்கான வட்டி 7.5 சதவீதம் கூட்டு வட்டி காலாண்டிற்கு ஒரு முறை கணக்கீடு செய்யப்பட்டு இரண்டு வருடங்கள் கழித்து முதிர்வடையும் போது வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் மார்ச் 31ம் தேதி 2025 வரை மட்டுமே சேர முடியும். திருச்சி மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவர் அன்னையர் தினத்தை முன்னிட்டு இந்திட்டத்தில் ரூ.50,000 முதல் ரூ.2 லட்சம் வரை மே 1ம் தேதி முதல் 16ம் தேதி வரை முதலீடு செய்தவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஒரு சிறப்பு குலுக்கல் போட்டியினை அறிவித்து இருந்தார். இந்த போட்டியில் பட்டுக்கோட்டை தபால் கோட்டத்தில் இருந்து தில்லை விளாகத்தை சேர்ந்த பாக்கியா என்பவர் தேர்வு செய்யப்பட்டு மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவரின் பரிசை தில்லைவிளாகம் கிளை அஞ்சலக அதிகாரி வழங்கினார். எனவே இந்த திட்டத்தில் அனைத்து மகளிரும் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் திட்டத்தில் பெண்கள் சேரலாம் appeared first on Dinakaran.

Tags : Mahla Samman ,Thanjavur ,Pattukkotta Postal Superintendent ,Indian government ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...