×

வேலை தேடுவோர் நேரில் வர அழைப்பு ஜெயங்கொண்டத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி

ஜெயங்கொண்டம், ஜூன் 16: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டத்தில் மூன்றாம் நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி, மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்து அலுவலர்களும் ஏற்றனர். அரியலூர் மாவட்டத்தில் 1432ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் ஜெயங்கொண்டம் வட்டத்திற்கான 3ம் நாள் ஜமாபந்தி வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது.

இதில், 1432-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயத்தில் மூன்றாம் நாளில் குண்டவெளி உள்வட்டத்திற்குட்பட்ட பாப்பாகுடி (வடபாகம்), பாப்பாகுடி (தென்பாகம்), தர்மசமுத்திரம், வங்குடி, இளையபெருமாள்நல்லூர், குண்டவெளி (மேல்பாகம்), குண்டவெளி (கீழ்பாகம்), முத்துசேர்வாமடம், காட்டகரம் (வடக்கு), காட்டகரம் (தெற்கு), குலோத்துங்கநல்லூர், தழுதாழைமேடு, குருவாலப்பர்கோவில் ஆகிய 13 கிராம பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 199 மனுக்கள் பெறப்பட்டு அவற்றில் 24 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, இவர்களுக்கு இன்றைய தினமே பட்டா மாறுதலுக்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

மேலும், மீதமுள்ள 175 மனுக்கள் விசாரணையில் உள்ளது. இம்மனுக்களை உரிய விசாரணை செய்து தீர்வுகாணவும், கிராம கணக்குகளை முறையாக பராமரிக்கவும், நிலஅளவை அலுவலர் பயன்படுத்தும் கருவிகளை பார்வையிட்டு, உரிய முறையில் பராமரிக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா அறிவுறுத்தினார்.

மேலும், ஜெயங்கொண்டம் வட்டத்தில் ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகத்தில் இன்று 16ம் தேதி உடையார்பாளையம் உள்வட்டத்திற்குட்பட்ட தேவாமங்கலம், அங்கராயநல்லூர் (மேல்பாகம்), அங்கராயநல்லூர் (கீழ்பாகம்), சூரியமணல் (குணமங்கலம், கச்சிப்பெருமாள், துளாரங்குறிச்சி உட்பட), இடையார் (ஏந்தல், தூங்கான் உட்பட), வாணதிரையன்பட்டினம், பிலிச்சிக்குழி (ஒக்கநத்தம், காங்கேயன்குறிச்சி உட்பட), உடையார்பாளையம் (மேற்கு), உடையார்பாளையம் (கிழக்கு), தா.சோழங்குறிச்சி (வடக்கு), தா.சோழங்குறிச்சி (தெற்கு), தத்தனூர் (மேற்கு), தத்தனூர் (கிழக்கு) ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறும்.

முன்னதாக, அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு, முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வாசிக்க, அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் ஏற்று கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், சமூக நல அலுவலர் .பூங்குழலி, மாவட்ட ஆட்சியரக மேலாளர்(பொது) குமரையா, தாசில்தார் துரை, துணை தாசில்தார்கள், நில அளவை அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post வேலை தேடுவோர் நேரில் வர அழைப்பு ஜெயங்கொண்டத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி appeared first on Dinakaran.

Tags : Jayangkonda ,Jayangondam ,Jamabandhi ,Jayangondam Circle, Ariyalur District ,Dinakaran ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே பெண் குளிக்கும்...