×

காளையார்கோவிலில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

காளையார்கோவில், ஜூன் 16: காளையார்கோவில் ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் ஒன்றிய தலைவர் தலைமையில் நடைபெற்றது. காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியத்திற்குட்பட்ட (சேர்மன் உள்பட) 11 கவுன்சிலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒன்றிய தலைவர் ராஜேஸ்வரி, துணைத்தலைவர் ராஜா, வேளாண்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை, மின்வாரியத் துறை, மற்றும் சில துறை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் கவுன்சிலர் கந்தசாமி பேசுகையில், மாராத்தூர் கண்மாய்க்குள் உள்ள மின்சாதன பெட்டியை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார்.

பழுதடைந்த சமுதாய கூடத்தை இடித்த இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுன்சிலர் பாண்டியராஜன் பேசினார்.துணைத்தலைவர் ராஜா, மின்வாரியத்துறை அதிகாரிகள் பணம் கேட்பதாக துறை அதிகாரியிடம் கேள்வி எழுப்பினார். மற்ற அனைத்து கவுன்சிலர்களும் தங்கள் பகுயில் உள்ள குறைகளை பற்றிய கேள்வி எழுப்பினர். தொடர்ந்து பல்வேறு குறைகளை பற்றிய விவாதங்கள் நடைபெற்றது. அனைவருக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாதன் ஆகியோர் பதில் கூறினார்.

The post காளையார்கோவிலில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Kalayarkovil ,Kalayarkoil ,Kalaiyarkoil Panchayat Union ,Kalaiyarkoil ,Dinakaran ,
× RELATED ஹெட் ஃபோனில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்த நபருக்கு நேர்ந்த சோகம்!