×

ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்தை இரவு நேரங்களில் ஒதுக்கும் பஸ்கள்பயணிகள் சிரமம்

 

ஒட்டன்சத்திரம், ஜூன் 16: ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்திற்குள் இரவு நேரங்களில் அரசு- தனியார் பஸ்கள் உள்ளே வர மறுத்து வெளியிலே நின்று செல்வதால் பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே இரவு நேரங்களில் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்திற்கு திருப்பூர், கோயம்புத்தூர், தாராபுரம், பழநி, திண்டுக்கல், மதுரை, வத்தலக்குண்டு, தேனி மார்க்கமாக ஒவ்வொரு நாளும் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.

இதனால் இப்பஸ் நிலையம் தினந்தோறும் ஏராளமான வெளியூர், உள்ளுர் பயணிகள் வந்து செல்லும் இடமாக உள்ளது. இதுமட்டுமின்றி பள்ளி- கல்லூரி மாணவர்கள், அரசு- தனியார் ஊழியர்கள் என தினமும் பலர் வந்து செல்கின்றனர். இப்பஸ் நிலையத்தில் பஸ்கள் அனைத்தும் அதிகாலை 7 மணிக்கு தான் உள்ளே வருகிறது. அதேபோல் இரவு நேரங்களில் 8 மணிக்கு மேல் பஸ் நிலையத்திற்குள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்வதில்லை. பஸ் நிலையம் வெளியே பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு சென்று விடுகின்றனர்.

இதனால் பஸ் நிலையத்திற்குள் பஸ் வரும் என நம்பி பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. குறிப்பாக புதிதாக பஸ் நிலையம் வரும் பயணிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் பயணிகள் பஸ்கள் வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த பின்னர் பஸ் நிலையத்திற்கு வெளியே செல்வதையறிந்து வேகமாக ஓடி செல்கின்றனர். இதனால் அப்போது விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இரவு நேரங்களில் அனைத்து பஸ்களும் ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்திற்குள் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்தை இரவு நேரங்களில் ஒதுக்கும் பஸ்கள்பயணிகள் சிரமம் appeared first on Dinakaran.

Tags : Ottenchatram Bus Station ,Ottanchatram ,Ottanchatram bus station ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி