×

மணலி மண்டலம், 17வது வார்டில் மாநகராட்சி தொடக்க பள்ளிக்கு ₹30 லட்சத்தில் புதிய கட்டிடம்: கலெக்டர், எம்எல்ஏ, மேயர் திறந்து வைத்தனர்

திருவொற்றியூர்: மணலியில் மாநகராட்சி தொடக்க பள்ளிக்கு ₹30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை கலெக்டர், எம்எல்ஏ, மேயர் ஆகியோர் திறந்து வைத்தனர். சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், 17வது வார்டுக்கு உட்பட்ட அரியலூரில் மாநகராட்சி தொடக்க பள்ளி உள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. எனவே, இதனை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும், என பெற்றோர் வலியுறுத்தினர். அதன்பேரில், ₹30 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு சென்னை மாநகராட்சி திட்டமிட்டது.

இதற்காக வார்டு கவுன்சிலர் ஜெய்சங்கர் மேம்பாட்டு நிதியில் ₹14.96 லட்சம், மாநகராட்சி பொது நிதியில் ₹4.94 லட்சம், பிரதமர் மேம்பாட்டு நிதியில் ₹9.96 லட்சம் என மொத்தம் ₹29.86 லட்சம் செலவில் நவீன கழிப்பிடம், 2 வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. இதற்கான தொடக்க விழா மண்டலக்குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி, மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்து மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினர்.

நிகழ்ச்சியில், சென்னை வடக்கு வட்டார துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாதவரம் மண்டலக்குழு தலைவர் நந்தகோபால், மண்டல உதவி ஆணையர் கோவிந்தராஜ், செயற்பொறியாளர் பிரதீப் குமார், உதவி செயற்பொறியாளர் தேவேந்திரன், உதவி பொறியாளர் திருமாறன், திமுக பகுதி செயலாளர்கள் புழல் எம்.நாராயணன், அருள்தாசன், கவுன்சிலர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மணலி மண்டலம், 17வது வார்டில் மாநகராட்சி தொடக்க பள்ளிக்கு ₹30 லட்சத்தில் புதிய கட்டிடம்: கலெக்டர், எம்எல்ஏ, மேயர் திறந்து வைத்தனர் appeared first on Dinakaran.

Tags : Manali Zone, ,17th Ward ,MLA ,Thiruvottyur ,Manali Zone ,Corporation Elementary School ,
× RELATED டிடிவி, ஓபிஎஸ் டெபாசிட் வாங்குவதே பெரிய விஷயம்: அதிமுக எம்எல்ஏ பளீர்