×

பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

கடலூர், ஜூன் 16: கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன்கள் சரவணன், பாலசுப்பிரமணியன் இவர்கள் இருவருக்கும் இடையே வீட்டுமனையை பிரிப்பது தொடர்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது.இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது சரவணன் மனைவியான கவிதா என்பவரை பாலசுப்ரமணியன் ஆபாசமாக திட்டி, தாக்கி மானபங்கப்படுத்தியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் பாலசுப்ரமணியன் மீது கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Kannan ,Manjakuppam ,Saravanan ,Balasubramanian ,Dinakaran ,
× RELATED லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் உதவியாளர் சஸ்பெண்ட்