×

32வது வார்டில் பேவர் பிளாக் சாலை பணி

நெல்லை, ஜூன் 16: நெல்லை மாநகராட்சி பாளை மண்டலம் 32வது வார்டு கரிய நாயனார் தெருவில் ரூ.20 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை பாளையங்கோட்டை தொகுதி எம்எல்ஏ அப்துல்வஹாப் துவக்கிவைத்தார். நிகழ்ச்சிக்கு 32வது வார்டு கவுன்சிலர் அனுராதா சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். ஒன்றிய முன்னாள் அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் பங்கேற்றார். பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை அப்துல் வஹாப் எம்எல்ஏ, நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம். சரவணன், துணை மேயர் கேஆர் ராஜூ துவக்கிவைத்தனர். இதைத்தொடர்ந்து பாளை. புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய சாலை அமைக்கும் பணிகளை அப்துல் வஹாப் எம்எல்ஏ துவக்கிவைத்தார்.

நிகழ்ச்சிகளில் மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் மேலப்பாளையம் கதீஜா இக்லாம் பாசிலா, பாளை. பிரான்சிஸ், உதவி கமிஷனர் காளிமுத்து, மேலப்பாளையம் பகுதி செயலாளர் துபை சாகுல், பகுதி பொருளாளர் எட்வர்ட் ஜான், மாநகராட்சி கவுன்சிலர்கள் டாக்டர் சங்கர், ஆமினா சாதிக், ரம்சான் அலி, அலிசேக் மன்சூர், சுந்தர், ஷபி அமீர் பாத்து, வட்டச் செயலாளர்கள் ஜான் கென்னடி, சுப்ரீத் சுப்பிரமணியன், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் தினேஷ், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் பலராமன், மீனவரணி மாவட்ட அமைப்பாளர் பீனிக்ஸ் அந்தோணி, டாஸ்மாக் தொமுச அரசன் ராஜ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் காசிமணி, சிறுபான்மை பிரிவு பாளை பீரப்பா, பாளை. மைக்கேல் ராஜேஷ், பொறியாளர் அணி சாய் பாபா, விவசாய அணி கால்வாய் துரை பாண்டியன், பழ கண்ணன், குறிச்சி ஆனந்த், கலையரசன், சேதுராமலிங்கம், பாளை புகாரி, புரோஸ்கான், ஷேக் உஸ்மானி, தச்சை மாரிச்சாமி, சந்திரசேகர், காங்கிரஸ் மாநகர் மாவட்ட துணைத் தலைவர் அருள்ராஜ், மண்டல தலைவர் ராஜேந்திரன், சேர்மகனி, மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் அனிதா, துணை அமைப்பாளர் பவானி ராஜ்குமார், தேவிகா, நிர்வாகிகள் ஷபி, மாரியப்பன், கணேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post 32வது வார்டில் பேவர் பிளாக் சாலை பணி appeared first on Dinakaran.

Tags : Paver Black ,32nd Ward ,NALLI ,Naddy Corporation Pala Zone ,32nd Ward Karya Nayanar Street ,32th ,Ward ,Paver ,Black Road ,Dinakaran ,
× RELATED மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் பராமரிப்பு இல்லாத சிறுவர் பூங்கா