×

உடன்குடியில் பாஜ ஆர்ப்பாட்டம்

உடன்குடி, ஜூன் 16: உடன்குடி கூட்டுறவு வங்கியில் முறைகேடு செய்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் அதே இடத்தில் பணி செய்து வரும் செயலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய விவசாய அணி தலைவர் திருநாகரன் தலைமை வகித்தார். ெஜயக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சிவமுருகஆதித்தன் கண்டன உரையாற்றினார். இதில் கிராம விவசாய சங்க தலைவர் உதிரமாடன்குடியிருப்பு கணேசன், கருமேனியாறு மேம்பாட்டுத் தலைவர் தங்கராஜ் மற்றும் பாஜவினர் கலந்து கொண்டனர். ஒன்றிய செயலாளர் அழகேசன் நன்றி கூறினார்.

The post உடன்குடியில் பாஜ ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Udangudi ,Ebengudi ,Ebengudi Cooperative Bank ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...