×

சிறந்த பயிற்சி விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தூத்துக்குடி, ஜூன் 16: தமிழ்நாடு அரசு 2023ம் ஆண்டு சுதந்திர தின விழாவின்போது, அரசு அலுவலகங்களில் புதிய யுத்திகளை கையாண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சிறந்த பயிற்சி விருது-2023 வழங்கி கவுரவிக்க உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் புதிய வகையான யுத்திகளை கையாண்டு வெற்றி பெற்று, நல்லாட்சியின் நீடித்த தரமான வளர்ச்சியை மேம்படுத்திய அலுவலர்கள், அமைப்புகள், நிறுவனங்களுக்கு சிறந்த பயிற்சி விருது வழங்கப்பட உள்ளது. விருது பெற தகுதி உடையவர்கள், தாங்கள் புரிந்த சாதனைகள் குறித்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துரு தயார் செய்து 10.7.2023 மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். இத்தகவலை கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

The post சிறந்த பயிற்சி விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Tamil Nadu government ,Independence Day ,Dinakaran ,
× RELATED உள்ளாட்சித் தேர்தல் பணியின்போது...