×

கர்நாடக பாடத்திட்டத்தில் ஆர்எஸ்எஸ் நிறுவனர் மற்றும் சாவர்க்கர் பாடங்கள் நீக்கம்: மாநில அமைச்சரவை ஒப்புதல்

பெங்களூரு: கர்நாடக பாடத்திட்டத்தில் இருந்து ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெக்டேவார், சாவர்க்கர் ஆகிேயாரது பாடங்களை நீக்க அம்மாநில அரசு முடிவு செய்து அமைச்சரவையில் ஒப்புதல் பெற்றுள்ளது. கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான கன்னடம் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள் மாற்றத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

மேலும் நடப்பு கல்வியாண்டில் இருந்தே ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெக்டேவார், இத்துத்துவா கொள்கை கொண்ட சாவர்க்கர் உள்பட பலரது பாடங்களை நீக்க முடிவு செய்யப்பட்டது. அதே சமயம் சாவித்ரிபாய் பாலே, இந்திராவுக்கு நேருவின் கடிதங்கள், அம்பேத்கர் குறித்த கவிதைகள் ஆகியவற்றை சேர்த்துள்ளது. இது குறித்து அமைச்சர் எச்.கே.பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘பள்ளி பாடப்புத்தகத்தில் பாஜ ஆட்சியில் சேர்க்கப்பட்ட ஆர்எஸ்எஸ் நிறுவனர் மற்றும் தலைவர்களின் பாடங்கள் நீக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் வாக்குறுதி அளிததிருந்தது. அதன்படி நடப்பு கல்வியாண்டு முதலே அந்த பாடங்கள் நீக்கப்பட்டுள்ளது’ என்றார்.

The post கர்நாடக பாடத்திட்டத்தில் ஆர்எஸ்எஸ் நிறுவனர் மற்றும் சாவர்க்கர் பாடங்கள் நீக்கம்: மாநில அமைச்சரவை ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : RSS ,Sawarkar ,Karnataka ,State Cabinet ,Bengaluru ,Hecdewar ,Sawargarh Aagiyaradi ,Sawargarh ,Dinakaran ,
× RELATED ஜனநாயகத்தின் மீது தொடர் தாக்குதல்...