×

ஜலகண்டேஸ்வரர் கோயிலில் வரும் 25ம் தேதி மகாகும்பாபிஷேகம் பாதுகாப்பு ஏற்பாடுகள் எஸ்பி ஆய்வு வேலூர் கோட்டையில் அமைந்துள்ள

வேலூர், ஜூன் 16: வேலூர் கோட்டையில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்பி மணிவண்ணன் நேற்று ஆய்வு செய்தார்.
வேலூர் கோட்டையில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோயில் மஹா கும்பாபிஷேகம் வரும் 25ம் ேததி காலை 9.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் நடைபெற உள்ளது. இதனையொட்டி வரும் 21ம் தேதி காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, எஜமானர் சங்கல்பம், மஹா கணபதி பூஜை, லட்சுமி பூஜை நடைபெற உள்ளது. மாலை 5.30 மணிக்கு வாஸ்து சாந்தி, ப்ரவேசபலி, ரக்ஷோக்ன ஹோமம், தீபாராதனை நடைபெற உள்ளது.

இதனைத்தொடர்ந்து 22ம் தேதி நவக்கிரக பூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை உள்ளிட்ட பூஜைகளும், ெதாடர்ந்து 23ம் தேதி மற்றும் 24 ஆகிய தேதிகளில் ஆசாரிய தசவித ஸ்நானம், ரக்ஷா பந்தனம், மூர்த்தி ஹோமம், 2ம்கால யாக பூஜை, 3ம் கால யாக பூஜைகள் நடைபெற உள்ளது. இதற்கிடையே கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், வேலூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேலூர் கோட்டைக்கு வருவார்கள்.
இதனையொட்டி வேலூர் கோட்டையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக எஸ்பி மணிவண்ணன், கோயில் நிர்வாகிகள் கலவை சச்சிதானந்த சுவாமிகள், சுரேஷ்குமார், வெங்கடசுப்பு மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பக்தர்களை எந்தெந்த வழிகளில் அனுமதிப்பது, வெளியேறும் வழிகள், என்ன? எத்தனை போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்த வேண்டும், கார், பைக் பார்க்கிங் எங்கு அமைக்கலாம் என்று ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆய்வின்போது ஏஎஸ்பி பிரசன்னகுமார், டிஎஸ்பி திருநாவுக்கரசு உட்பட பலர் இருந்தனர்.

The post ஜலகண்டேஸ்வரர் கோயிலில் வரும் 25ம் தேதி மகாகும்பாபிஷேகம் பாதுகாப்பு ஏற்பாடுகள் எஸ்பி ஆய்வு வேலூர் கோட்டையில் அமைந்துள்ள appeared first on Dinakaran.

Tags : Mahakumbabhishekam ,Jalakandeswarar Temple ,SP Pratt ,Vellore Fort ,Vellore ,Jalakandeswarar ,Temple ,SP ,
× RELATED ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ...