×

ஜகாவ் துறைமுகம் அருகே கரையை கடந்தது குஜராத்தை தாக்கியது பிபர்ஜாய் புயல்: மணிக்கு 145 கிமீ வேகத்தில் சூறை காற்று

கட்ச்: பிபர்ஜாய் புயல் குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள ஜகாவ் துறைமுகத்திற்கு அருகில் கரையை கடந்தது. அரபிக்கடலில் 10 நாட்களுக்கும் மேலாக நிலை கொண்டிருந்த பிபர்ஜாய் புயல் குஜராத் மற்றும் பாகிஸ்தான் இடையே நேற்று மாலை கரையைக்கடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து குஜராத் கடற்கரை பகுதியில் உள்ள 8 மாவட்டங்களில் இருந்து 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நேற்று காலையில இருந்தே இதை தொடர்ந்து கட்ச் மற்றும் சவுராஷ்டிரா பகுதியில் கனமழை கொட்டியது. மாலையில் புயல் கரையை கடக்கத்தொடங்கியது.

கட்ச் மற்றும் தேவபூமி துவாரகா மாவட்டங்கள் இடையே கரையை கடந்தது.. புயலின் கண் சுமார் 50 கிமீ விட்டம் கொண்டதாக இருந்தது. அப்போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் காற்று வீசியது. புயல் கரையை முழுமையாக கடக்க நள்ளிரவு வரை ஆகும் என்று இந்திய வானிலை மைய இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறினார்.

புயல் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக 15 என்டிஆர்எப் குழுக்கள், மாநில பேரிடர் மீட்புப் படையின் 12 குழுக்கள் மற்றும் இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை, இந்திய கடலோர காவல்படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை ஆகியவற்றின் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அதே சமயம் கட்ச், தேவபூமி துவாரகா, ஜாம்நகர், போர்பந்தர், ராஜ்கோட், மோர்பி, ஜுனகர் மாவட்டங்களில் மிக கனமான மழை கொட்டியது. சில இடங்களில் 25 செமீ வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்ற மொஹபத்ரா எச்சரித்தார். அதே சமயம் கடல் அலை 14 மீட்டர் வரை உயரம் வரை எழுந்தது.

The post ஜகாவ் துறைமுகம் அருகே கரையை கடந்தது குஜராத்தை தாக்கியது பிபர்ஜாய் புயல்: மணிக்கு 145 கிமீ வேகத்தில் சூறை காற்று appeared first on Dinakaran.

Tags : Cyclone ,Jagao port ,Gujarat ,Kutch ,Pibarjai ,Kutch region ,Arabian Sea ,Cyclone Pibarjai ,Dinakaran ,
× RELATED திருச்சியில் பெய்த சூறாவளி, கனமழையால்...