×

அமெரிக்காவின் எம்கியூ-9பி டிரோன்களை வாங்கும் இந்தியா: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

புதுடெல்லி: அமெரிக்காவிடம் இருந்து எம்கியூ-9பி என்ற அதிநவீன ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.பிரதமர் மோடி வரும் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்லவுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் எம்கியூ-9பி ரக ஆளில்லா விமானங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. கடல்சார் கண்காணிப்பு, அதிக உயரத்தில் பறக்கும் திறன், ஏவுகணைகளை சுமந்து சென்று இலக்குகளை துல்லியமாக தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை எம்கியூ-9பி கொண்டுள்ளது.

ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை வாங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. கடற்படைக்கு 14 விமானங்களும், விமானப்படை மற்றும் ராணுவத்துக்கு தலா 8 விமானங்களும் வாங்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்தாலும், தற்சார்பு இந்தியா திட்டம் காரணமாக செயல்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

The post அமெரிக்காவின் எம்கியூ-9பி டிரோன்களை வாங்கும் இந்தியா: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : India ,US ,Ministry of Defence ,New Delhi ,PM Modi ,
× RELATED அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து...