×

மணிப்பூரில் தொடரும் வன்முறை பாதுகாப்பு படையினருடன் கலவரக்காரர்கள் மோதல்: வீடுகள் தீ வைத்து எரிப்பு

இம்பால்: மணிப்பூரில் பாதுகாப்பு படையினருக்கும், கலவரக்காரர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மணிப்பூரில் குக்கி, மெய்ட்டி இன மோதல் மே 3ம் தேதி தொடங்கி தற்போது வரை நடந்து வருகிறது. 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு விட்டனர். ஏராளமான வீடுகள், கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

காமன்லோக் பகுதியில் சர்ச்சில் தங்க வைக்கப்பட்டு இருந்த 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 10 பேர் குண்டுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று கலவரக்காரர்களை விரட்டி அடிக்க முயன்ற போது பாதுகாப்பு படையினருக்கும், அவர்களுக்கும் இடையே கடும் மோதல் உருவானது. இம்பாலில் உள்ள நியூ செக்கனில் இந்த மோதல் நடந்தது. அப்போது காலியாக உள்ள வீடுகளை கலவரக்காரர்கள் எரித்தனர். இதனால் பதற்றம் நீடித்து வருகிறது.

The post மணிப்பூரில் தொடரும் வன்முறை பாதுகாப்பு படையினருடன் கலவரக்காரர்கள் மோதல்: வீடுகள் தீ வைத்து எரிப்பு appeared first on Dinakaran.

Tags : Rioters ,Manipur ,Imphal ,Kuki ,Meitei ,Dinakaran ,
× RELATED ரெமல் புயல் காரணமாக பெய்த தொடர்...