×

ஜமாபந்தி நிகழ்ச்சியில் புதிய கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரித்தும் மனு: கிராம மக்கள் முடிவால் பரபரப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில், புதிய கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மனு அளித்த நிலையில், புதிய கல்குவாரிக்கு ஆதரவு தெரிவித்து, சிறப்பு அலுவலரிடம், கிராம மக்கள் மனு அளித்தனர். இது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அடுத்த சரவம்பாக்கம் கிராமத்தில் புதிய கல்குவாரி அமைப்பதற்கான பணி நடந்து வருகிறது. இந்த கிராமத்தில் ஏற்கனவே நிலத்தடி நீர் குறைந்ததால், பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் குடிநீரின்றி அவதிப்பட்டடு வருகின்றனர்.

இதனால், சரவம்பாக்கம் மற்றும் அருகில் உள்ள கிராம பகுதியை சேர்ந்த மக்கள், புதிய கல்குவாரிக்கு அனுமதியை ரத்து செய்யக்கோரி, மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலக பகுதியில் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த ஜமாபந்தி முகாமில், புதிய கல்குவாரியின் அனுமதியை ரத்து செய்யக்கோரி மனு அளித்தனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் புதிய கல்குவாரிக்கு ஆதரவு தெரிவித்து, புதிய கல்குவாரி பணி நடைபெற வேண்டும் என ஜமாபந்தி நிகழ்ச்சியில், சிறப்பு அலுவலர் ராஜேஷிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஜமாபந்தி நிகழ்ச்சியில் புதிய கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரித்தும் மனு: கிராம மக்கள் முடிவால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kalquari ,Jamabandhi ,Madhurandakam ,Madurandakam District Collector's Office ,
× RELATED மதுரை மாவட்டம் பாலமேடு அருகே...