×

பாஜ ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட மதமாற்ற தடை சட்டம் வாபஸ் கர்நாடக அமைச்சரவை அனுமதி

பெங்களூரு: பாஜ ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட மதமாற்ற தடை சட்டம், ஏபிஎம்சி சட்டம் வாபஸ் பெறுவதற்கு முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு விதான சவுதாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. மொத்தம் 17 விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் எச்கே. பாட்டீல் கூறியதாவது:
முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த இரண்டாவது அமைச்சரவை கூட்டத்தில் மொத்தம் 17 விஷயங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டது. கடந்த பாஜ ஆட்சியின் போது மதமாற்ற தடை சட்டம், ஏபிஎம்சி சட்டம் ஆகியவற்றில் அமல்படுத்தப்பட்ட திருத்தங்களை வாபஸ் பெறுவது குறித்து அமைச்சரவையில் விரிவாக விவாதிக்கப்பட்டு அடுத்த மாதம் ஜூலை 3ல் தொடங்கும் பேரவை தொடரில் மசோதா நிறைவேற்றி திரும்ப பெறுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதாவது மதமாற்ற தடை சட்டத்தில் கடந்த பாஜ ஆட்சியில் செய்யப்பட்ட திருத்தம் மட்டும் வாபஸ் பெறப்படும். அது போல் விவசாயிகளை பாதிக்கும் ஏபிஎம்சி சட்டத்தில் பாஜ கொண்டு வந்த திருத்தம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post பாஜ ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட மதமாற்ற தடை சட்டம் வாபஸ் கர்நாடக அமைச்சரவை அனுமதி appeared first on Dinakaran.

Tags : Karnataka Cabinet ,Bengaluru ,Chief Minister ,Sitaramaia ,Baja ,Dinakaran ,
× RELATED பாஜவில் இருந்து ஈஸ்வரப்பா திடீர் நீக்கம்