×

டெல்லி கோச்சிங் சென்டரில் திடீர் தீ

புதுடெல்லி: டெல்லியின் முகர்ஜி நகரில் உள்ள கோச்சிங் மையம் ஒன்றில் நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்பு துறைக்கு நேற்று நண்பகல் 12.27க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக 11 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.

கோச்சிங் மையத்தில் பெரும்பாலும் மாணவர்கள் பயிற்சி பெற்று வந்தனர். தீயை அணைக்கும் போது, அங்கிருந்த மாணவர்கள் ஜன்னல் வழியாக கயிற்றின் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்படும் வீடியோ காட்சிகளையும் தீயணைப்பு துறை வெளியிட்டது. மாலை 4 மணி வரை போராடி தீயை அணைத்ததாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இந்த விபத்தில் யாருக்கும் தீக்காயமோ அல்லது வேறு எந்தவித அசம்பாவிதமோ ஏற்படவில்லை.

The post டெல்லி கோச்சிங் சென்டரில் திடீர் தீ appeared first on Dinakaran.

Tags : Delhi Coaching Centre ,New Delhi ,Mukherjee Nagar, Delhi ,Delhi coaching center ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு