×

சீன பிரதமருடன் பாலஸ்தீன அதிபர் சந்திப்பு

பெய்ஜிங்: சீனாவுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் சீன பிரதமர் லீ கியாங்கை நேற்று சந்தித்து பேசினார். சீனாவும், பாலஸ்தீனமும் நீண்ட காலமாக நட்புறவை பேணி வருகின்றன. பாலஸ்தீனத்தின் நம்பத் தகுந்த நட்பு நாடாக சீனா விளங்குகிறது. இந்நிலையில் சீனா, பாலஸ்தீன உறவை மேலும் வலுப்படுத்த சீனா விரும்புகிறது.

இந்நிலையில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ளார். அவருக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் முழு ராணுவ மரியாதையுடன் வரவேற்பளித்தார். தொடர்ந்து சீன பிரதமர் லீ கியாங்குடன் பாலஸ்தீன அதிபர் அப்பாஸ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது முக்கியமான துறைகள், பிரச்னைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

The post சீன பிரதமருடன் பாலஸ்தீன அதிபர் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : President ,PM ,Beijing ,Mahmoud Abbas ,China ,Li Qiang ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து...