×
Saravana Stores

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கினார். இதில், அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்துகொண்டு முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.காஞ்சிபுரம் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், முதியோர்களுக்கான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமான நேற்று முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன்.

மனரீதியாகவும், உடல்ரீதியாகவும், காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன். பொது இடங்களான மருத்துவமனை, வங்கி, பேருந்து போன்ற இடங்களில் முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்கு எதிரான கொடுஞ்செயல்கள், வன்முறைகள் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதை தடுத்திட பாடுபடுவேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், அலுவலக மேலாளர் (பொது) ரமேஷ், அனைத்து துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி appeared first on Dinakaran.

Tags : Anti-Elder Abuse Day ,Kanchipuram ,Anti-Elderly Abuse Day ,Harmony Center Forum ,District ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் மாநகராட்சி 4வது வார்டில்...