×

மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் கால் எலும்பு முறிவுக்கு புதிய சிகிச்சை முறை: மருத்துவமனை தலைவர் மல்லிகா மோகன்தாஸ் தகவல்

சென்னை: சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனைதலைவர் மல்லிகா மோகன்தாஸ், எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் ராம்பிரசாத் ஜஸ்தி ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில், ‘நவீன தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி இந்தியாவிலேயே முதன்முறையாக காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு தசைகள் பாதிக்கப்படாமல், அறுவை சிகிச்சை இல்லாமல் இலகுவாக துருபிடிக்காத டைட்டானிய உலோக கம்பி பயன்படுத்தி எலும்புக்கு இடையே ஸ்குரூ போட்டு சிகிச்சை அளிக்கும் முறை மியாட் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஆனால், ‘டிபியா நெய்ல் அட்வான்ஸ் சிஸ்டம்’ முறையில் மென்மையான தசை திசுக்கள், ரத்த நாளங்கள் பாதிக்கப்படாமல் இலகுவாக எலும்புகள் பாதிக்கப்படாமல் ‘பின்-ஹோல்’ சிகிச்சை அளிப்பதன் மூலம் ரத்த ஓட்டத்தை பாதுகாக்க முடிகிறது. மருத்துவமனையில் நோயாளிகளால் 2 நாளில் நடக்கவும் முடியும்’’ என்றனர். இந்த சிகிச்சை முறையின் அறிமுகம் மற்றும் கருத்து பரிமாற்ற நிகழ்ச்சி இன்று (16ம் தேதி) மியாட் மருத்துவமனையில் நடக்க உள்ளது.

The post மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் கால் எலும்பு முறிவுக்கு புதிய சிகிச்சை முறை: மருத்துவமனை தலைவர் மல்லிகா மோகன்தாஸ் தகவல் appeared first on Dinakaran.

Tags : Myatt Hospital ,Manappakkam ,President ,Mallika Mohandas ,Chennai ,Myatt International Hospital ,Manapakkam ,Ram Prasad ,
× RELATED டெல்லி மாநில காங். தலைவர் திடீர் ராஜினாமா