×

காவாம்பயிர் கிராமத்தில் புதிய ரேஷன் கடை: எம்பி, எம்எல்ஏ திறந்தனர்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த காவாம்பயிர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.11.25 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாரிவள்ளல், பேரூராட்சி மன்ற தலைவர் பொன்.சசிகுமார் முன்னிலை வைத்தனர். ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜீவாசங்கர் வரவேற்றார்.

நிகழ்ச்சியில், உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர், காஞ்சிபுரம் எம்பி செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு புதிய ரேஷன் கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். பின்னர், பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கி இனிப்புகள் வழங்கினர். இதனை தொடர்ந்து கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி, 1000 ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post காவாம்பயிர் கிராமத்தில் புதிய ரேஷன் கடை: எம்பி, எம்எல்ஏ திறந்தனர் appeared first on Dinakaran.

Tags : Kavambair ,MLA ,Uttramerur ,Assembly ,Uttaramerur ,Dinakaran ,
× RELATED சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை...