×

ஊதியூர் மலையடிவார பகுதியில் இரை தேடி சுற்றிய சிறுத்தை: சிசிடிசி கேமரா பதிவால் மக்கள் பீதி

காங்கயம்: ஊதியூர் மலையடிவார பகுதியில் இரை தேடி வந்த சிறுத்தையின் காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது அப்பகுதியினரிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் காங்கயம் அடுத்த ஊதியூர் வனப்பகுதிக்கு கடந்த சில மாதம் முன் வந்த ஒரு சிறுத்தை மலையடிவாரப் பகுதியில் பதுங்கி அருகே தோட்டங்களில் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது. இதையடுத்து காங்கயம் வனத்துறையினர் ஊதியூர் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் குறித்து எச்சரிக்கை பதாகைகள் வைத்தனர். பிறகு சிறுத்தையை கண்காணித்து வந்தனர்.

மேலும் கண்காணிப்பு கேமராக்கள், கூண்டுகள், டிரோன் கேமராக்கள் உள்ளிட்டவைகளை வைத்தும் தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் சிறுத்தை கூண்டுகளில் சிக்காமல் இதுவரை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது.
இதற்கிடையே பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சிறுத்தையை பார்த்ததாக தகவல் தெரிவித்தும் வந்தனர். வனத்துறையினர் அந்த இடங்களுக்கு சென்று சிறுத்தையின் கால் தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஊதியூர் மலையடிவார பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆட்டுக்குட்டிகள் மாயமாகி வந்தன. இத்தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று கால்தடங்களை ஆய்வு செய்து ஆடுகளை சிறுத்தை வேட்டையாடியதை உறுதிப்படுத்தினர்.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவு 12 மணியளவில் ஊதியூர் மலையடிவார பகுதியில் உள்ள விவசாயி கார்த்தி என்பவரது தோட்டத்தில் சிறுத்தை புகுந்தது. அந்த சிறுத்தை மெதுவாக நடந்து சென்று இரை தேடியுள்ளது. இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்தோடு அப்பகுதி மக்களை பீதியில் உறைய வைத்துள்ளது.

The post ஊதியூர் மலையடிவார பகுதியில் இரை தேடி சுற்றிய சிறுத்தை: சிசிடிசி கேமரா பதிவால் மக்கள் பீதி appeared first on Dinakaran.

Tags : Cheetah ,Phedgur ,Pedgur ,Dinakaran ,
× RELATED காங்கயம் பகுதியில் வெள்ள வேலமர பட்டை மரங்கள் மடியும் அபாயம்